நீர்கொழும்பு………
நீர்கொழும்பு, கட்டான பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் வீடு புகுந்து துப்பாக்கி முனையில்,
அவரை அச்சுறுத்தி மூன்று கோடி ரூபா பணம் மற்றம் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம் 7.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணமும், காரொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.