பிறந்து இரண்டே நாளில் கோடீஸ்வரியான அதிர்ஷ்ட குழந்தை!!

814

அமெரிக்காவில்..

ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த குழந்தையின் பெயரில் உள்ளன. இதையெல்லாம் குழந்தையின் பணக்கார தாத்தாவிடமிருந்து கிடைத்தது.

பிறந்து 48 மணி நேரத்தில் பணமழை பொழிந்த கோடீஸ்வர தாத்தா, தனது பேத்திக்கு ரூ.50 கோடிக்கு மேல் அறக்கட்டளை நிதியையும் பரிசாக அளித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் பாரி ட்ரூவிட்-பார்லோவின் (Barrie Drewitt-Barlow) மகள் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். தனது பேத்தி பிறந்த பிறகு, இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றிய படங்களைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பாரி.

51 வயதான பாரி தனது பேத்தியின் பெயரில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான மாளிகையையும், சுமார் 52 கோடி ரூபாய் அறக்கட்டளை நிதியையும் கொடுத்துள்ளார்.


இன்ஸ்டாகிராமில் தனது மகள் மற்றும் பேத்தியின் படத்தைப் பகிர்ந்து, “இன்று எனது 23 வயது மகள் சாஃப்ரன் டிரைவ்ட்-பார்லோ ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்கள் பேத்திக்கு பெயர் வைத்துள்ளோம்.” என்று கூறினார்.

கடந்த வாரம் தான் அந்த மாளிகையை வாங்கியதாக பாரி கூறினார். இப்போது இந்த மாளிகை தனது பேத்திக்கு சொந்தமானதாக மாறியதால், அவர் தனது பேத்திக்கு ஏற்ப அதன் உட்புறத்தை வடிவமைப்பதாகவும் கூறினார்.

தொழிலதிபர் பாரி இன்ஸ்டாகிராமில் தன்னை ஒரு கலைஞராக விவரிக்கிறார். அவருக்கு ரூ.1600 கோடி சொத்து இருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது.

பாரி தனது குடும்பத்திற்கு பல கோடி மதிப்புள்ள பரிசுகளை வழங்கியதற்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுவார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் அவர் 4 மில்லியன் பவுண்டுகள் செலவு செய்து கிறிஸ்துமஸ் கொண்டுவதாக பிரபலமாக அறியப்படுகிறார்.

பாரி ஒரு ஓரினச்சேர்க்கையாளர். 1999-ஆம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் தங்கள் வீட்டிற்கு வந்தனர். இதற்குப் பிறகு, பாரி தனது கூட்டாளியான டோனியை 2019-ல் பிரிந்தார்.

தற்போது இவர்களது மகள் கேசருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை வந்த மகிழ்ச்சியில் பாரி பல கோடி மதிப்பிலான சொத்தை பேத்தியின் பெயரில் கொடுத்துள்ளார்.