பாட்னா..
தனது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பதைக் கண்டுபிடித்த கணவரே, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இது குறித்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.
திருமணம் என்பது சிக்கலான உறவாகவே பலருக்கும் இருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு கணவர் அல்லது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பது தொடர்பான பகீர் சம்பவங்கள் நடந்தே வருகிறது.
கணவர் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பதைக் கண்டுபிடித்து மனைவி அந்த இடத்திற்கே சென்று இருவரையும் வெளுத்து வாங்கும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாகப் பல சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது.
ஷாக் சம்பவம்: ஆனால் இதற்கு நேர்மாறான ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. தனது மனைவி வேறு ஒருவருடன் உறவில் இருப்பது அந்த கணவருக்குத் தெரிய வந்துள்ளது. இருப்பினும், இதனால் அவரது கணவர் ஆத்திரமடைய இல்லை. கையும் களவுமாக இருவரும் சிக்கிய நிலையில், இருவரையும் அப்போதே அந்த கணவர் அருகில் இருக்கும் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் இளைஞன் ஒருவர் சிவன் கோவிலில் பெண்ணை தாலி கட்டி திருமணம் செய்து கொள்கிறார். பக்கத்திலேயே அந்த பெண்ணின் கணவருக்கும் இருக்கிறார்.
அந்த இளைஞருக்கு முகம், கை, கால்களில் காயம் இருந்துள்ளது. காயத்துடனேயே அந்த இளைஞன் பெண்ணுக்குக் குங்குமம் வைக்கிறார். இதனை அங்குள்ள பலரும் தங்கள் மொபைலில் வீடியோவாக எடுக்கும் நிலையில், அந்த பெண் கேமராவில் முகத்தைக் காட்டாமல் அழுகிறார்.
இரவு நேரத்தில் காதலன்: கணவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த நிலையில், நள்ளிரவில் அந்த பெண் தனது காதலனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். ஏற்கனவே அவரது காதலன் இதுபோல பல முறை வீட்டிற்கு வந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த முறை அக்கம் பக்கத்தினர் இவர்களை வசமாகப் பிடித்துவிட்டனர். இருவரையும் சரமாரியாகத் தாக்கிய அக்கம் பக்கத்தினர் அங்கேயே இருவரையும் பிடித்து வைத்துள்ளனர்.
இந்த களேபரம் எல்லாம் நடந்து கொண்டிருந்த போது வேலைக்காக வெளியூர் சென்றிருந்த கணவர் வீடு திரும்பியுள்ளார். தனது மனைவி வேறு ஒருவருடன் கள்ள உறவில் இருப்பதை அறிந்த அந்த நபர் இருவரையும் அருகில் இருந்த சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும், தனது மனைவியைக் காதலிக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்தை அவரே முன்னின்று நடத்தியுள்ளார்.
திருமணம்: இந்த பெண்ணுக்கு ஏற்கனவே தனது கணவருடன் குழந்தைகள் இருக்கிறது. அதேபோல பெண்ணின் காதலனுக்கும் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அங்குள்ள போலீசார் கூறுகையில், “சில நாட்களாக இந்த வீடியோ வேகமாகப் பரவி வருவதை நாங்களும் கவனித்தோம். இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து அந்த கணவர், கிராமத்தினர் அல்லது அந்த பெண் என யாரும் புகார் அளிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.