நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமா? வைரலாகும் புகைப்படம்!

1016

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா அவருடைய கணவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. ஆனால் வழக்கமான இவர்கள் போடும் புகைப்படம் போல் இல்லாமல், இதில் அனுஷ்கா ஷர்மா, கர்ப்பமாக இருப்பது போல் உள்ளது. இதனால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாமை கடந்த, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டதால், விராட் கோலியின் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து எப்போது குழந்தை பெற்று கொள்ள போகிறீர்கள் என்கிற ஒரு கேள்வியை பரவலாக முன் வைத்து வருகிறார்கள்.


ஆனால் அனுஷ்கா ஷர்மா தொடர்ந்து சிறந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருவதால், இவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை சற்று தள்ளி போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுஷ்கா கர்ப்பமாக இருப்பது போல் போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் விராட் கோலி அனுஷ்காவின் வயிற்றில் கை வைத்துள்ளது போல் உள்ளது.

கொஞ்சம் கூட போட்டோ ஷாப் செய்யப்பட்டது என்பது தெரியாத அளவிற்கு தத்ரூபமாக யாரோ ஒருவர் இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவ, விரைவில் இதே போல் அனுஷ்கா ஷர்மா உண்மையில் கர்ப்பமாக வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்திற்கு நிஜமாகவே சொந்தக்காரர், நடிகை ஜெனிலியா மற்றும் அவருடைய கணவர் ரிதேஷ் தேஷ்முக் தான். இவர்களுடைய புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.