யாழில் சிறுமி துஷ்பிரயோகம் – 19 வயதான இளைஞர் கைது!!

1106

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, எழுதுமட்டுவாழ் பகுதியில் 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலை தரப்பினரால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.


இதனையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனைப்பயன்படுத்தி சிறுமியை தனியே அழைத்துச் சென்ற இளைஞன் பாலியல் துஷ்பிரயோகத்தை புரிந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.