நியூயார்க்கில்….
மேற்கத்திய கலாச்சாரங்களில் திருமணம், விவாகரத்து மீண்டும் ஒரு லிவிங் டுகெதர் வாழ்க்கை சர்வ சாதாரணமானது. அதற்கு வரையறை எதுவுமே கிடையாது. விவாகரத்திற்கு பிறகு தனக்கு விருப்பமான நபரை மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். சமீப காலமாக அதன் போக்கு மேலும் மோசமாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் துணை தேவை என விளம்பரம் செய்து கொள்கின்றனர். அதன் மூலம் கிடைப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து வாழ்கின்றனர் . அதே போல் ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்று பெரும் வைரலாகி வருகிறது
நியூயார்க்கில் திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண் ஒருவர், கிரெய்க்ஸ் லிஸ்ட் அமெரிக்க நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பக்கத்தில் அதிர்ச்சி தரும் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு “ஆண் காதலன் தேவை” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கிரெய்க்ஸ் லிஸ்ட் என்பது வேலை, வீடு தேடுவோருக்கான விளம்பர இணையதளம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணையதள பக்கத்தில், அவர் ஹூஸ்டனின் புறநகர்ப் பகுதியான TX, Angletonல் எனக்கு ஒரு அழகான, விசாலமான 5 படுக்கையறை வீடு ஒன்று உள்ளது.
என்னுடன் வாழ்வதற்கு ஒரு ஆண் காதலன் அல்லது அறைத்தோழன் தேவை. அந்த ஆண் நண்பர் என்னுடன் முதல் 60 நாட்கள் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். குற்றப் பின்னணி இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர் பூனைகளை நேசிக்க வேண்டும். நான் ஒரு தடகள வீரர் என்பதால் பார்ப்பதற்கு மிகவும் மோசமாகத் தோன்றவில்லை.
என் எடையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் நல்ல நிறமாக இருப்பேன். நான் திருமணமாகி விவாகரத்து பெற்றவள். எனக்கு 13 மற்றும் 15 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் அவரது தந்தையுடன் சென்றுவிட்டதால் நான் தனிமையில் இருக்கிறேன்.
விவாகரத்திற்கு பிறகு யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை. எனது பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இத்தாலிய, இஸ்ரேலிய அல்லது யூத ரத்தம் உள்ளவர்களால் நான் ஈர்க்கப்படுகிறேன்.
அதனால் தான் நான் கிறிஸ்தவ ஆண் நண்பரோ அல்லது காதலரோ தேவை என நினைக்கிறேன்” என கூறியுள்ளார். ஜூலை 6ம் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Craigslist’s Personals section may have been deleted but it never died— it simply moved to the real estate section pic.twitter.com/fAgCH6jOXT
— frida k🕳️ (@frida_k_h0le) August 6, 2023