அவுஸ்திரேலியாவில் 2 நாயுடன் உறவு கொண்ட தம்பதி… இறுதியில் நேர்ந்த சோகம்!!

37963

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே(37) மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா(28) என்ற தம்பதி நாய்களுடன் உறவு கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு இந்த ஆண்டு ஜூலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சரினா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை முதல் முறையாக அவர்கள் மீது சுமத்தப்பட்ட 5 பிரிவு குற்றங்கள் குறிப்பிட்டு காண்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வீட்டு கண்காணிப்பு வசதிகளில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது என்று நியூயார்க் போஸ்ட் தகவல் தெரிவித்துள்ளது.


பத்திரிகை தகவல் படி, இருவரும் தொடர்ச்சியாக இரண்டு நாய்களுடன் உறவு வைத்துக் கொண்டதோடு அதை கேமராவில் படமாக பதிவு செய்ததாக உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான சம்பவம் முதலில் அக்டோபர் 18, 2021 திகதியும், அதனை தொடர்ந்து மார்ச் 19, மே 17, ஜூன் 6, அக்டோபர் 25, 2022 நடைபெற்று உள்ளது,

அத்துடன் இந்த அனைத்து சம்பவங்களும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சரினாவில் நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சட்டப்படி, சம்பந்தப்பட்ட தம்பதி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தம்பதி குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.