பாலியல் பலாத்காரம்… காதலரை பிரிந்தார் இத்தாலி பிரதமர்!!

185

இத்தாலியில்..

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும், தொலைக்காட்சி பத்திரிகையாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவும் காதலித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அதன் அடையாளமாக இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

10 வருடங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜியாம்ப்ருனோவை, ஜார்ஜியா மெலோனி சந்தித்தார். காதலில் விழுந்த இருவரும் திருமணம் செய்துகொள்ளாது சேர்ந்து வாழ்க்கையை தொடர்ந்தனர். கணவன் – மனைவிக்கு இடையே தனிப்பட்ட பிரச்சினை ஏதும் இல்லாதபோதும், ஜியாம்ப்ருனோ வாய்க்கொழுப்பில் உளறி வைத்தது இருவர் உறவுக்கும் தற்போது வேட்டு வைத்திருக்கிறது.

பத்திரிக்கையாளரான ஜியாம்ப்ருனோ அவர் பணியாற்றும் தொலைக்காட்சியில், பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் பற்றிய விவாத நிகழ்ச்சியில் அண்மையில் பங்கேற்றார். அப்போது பெண்கள் குடிப்பதும், அதன் காரணமாக நினைவை இழப்பதுமே அவர்கள் மீதான பலாத்காரத்துக்கு காரணமாகிறது என்னும் பொருளில் வாதிட்டார். இது பொதுவெளியில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.


நாட்டுப் பிரதமரின் கணவர் என்பதால், ஜியாம்ப்ருனோ கருத்துக்களுக்கு மெலோனியை பொறுப்பாளியாக்க சில ஊடகங்கள் முயன்றன. ஜியாம்ப்ருனோக்கு எதிரான அலையில் அவருக்கு எதிரான பழைய விவகாரங்கள் பலதும் உயிர்பெற்று எழுந்து வந்தன. குழுவாக பாலியல் உறவு கொள்வது,

சக பெண் ஊழியரை பாலியல் ரீதியில் அவமதித்துப் பேசியது, இன்னொரு பெண் ஊழியரிடம் அனுமதியின்றி பாலியல் அத்துமீறல் மேற்கொண்டது… என குப்பையை கிளறியதுபோல விவகாரங்கள் வெடித்துக் கிளம்பின.

கணவரின் கருத்துக்கள், செய்கைகள் அனைத்தும் பிரதமர் மெலோனி தலையில் விழுந்தன. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கணவரைப் பிரிவதாக தனது சமூக ஊடக கணக்குகள் வாயிலாக மெலோனி அறிவித்தார். ஜியாம்ப்ருனோ உடனான வாழ்க்கையை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்ததோடு, பிரிவின் முடிவையும் கனத்த இதயத்தோடு அறிவித்திருக்கிறார்.