பேத்தி வயது பெண்ணை மணந்த பிரித்தானியர் : வெளியாகியுள்ள துயரச் செய்தி!!

217

இங்கிலாந்தில்..

இங்கிலாந்திலுள்ள Colne என்னும் இடத்தைச் சேர்ந்த ரேமண்ட் (Raymond Calvert), தனது காதலியான சார்லட்டை (Charlotte) சந்திக்கும்போது, சார்லட்டுக்கு 16 வயது. இருவருக்கும் மகனாக ஜேமி (Jamie Rai) பிறக்கும்போது, ரேமண்டுக்கு வயது 78, சார்லட்டுக்கு வயது 25.

பிரித்தானியாவிலேயே அதிக வயதில் குழந்தை ஒன்றிற்கு தந்தையானவர் ரேமண்ட்தான். அப்போது, நீ உன் பிள்ளை வளர்வதை பார்ப்பதற்கு உயிருடன் இருக்கமாட்டாய் என்று பலரும் கூறினார்களாம்.

தன்னை விட 54வயது இளையவரான சார்லட்டுடன் சேர்ந்து வாழ்ந்த ரேமண்ட், அவரை முறைப்படி திருமணம் செய்துகொள்ளவும் இல்லை.


இந்நிலையில், தனது 91ஆவது வயதில் இயற்கை எய்தியுள்ளார் ரேமண்ட். அவரது மகன் ஜேமிக்கு இப்போது 12 வயது ஆகிறது. ரேமண்ட் பிரிவால் அவரது குடும்பத்தினர் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.