கணவன், மனைவி விஷமருந்தி தற்கொலை.. மகளின் காதல் விவகாரம் காரணமா?

315

மதுரையில்..

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 47). இவருடைய மனைவி வான்அழகி (43). இவர்கள் தங்கள் கிராமத்தில் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்கள். செல்வம் வான்அழகி தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள். ஞாயிறு அன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி கிடந்துள்ளனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

அதைத் தொடர்ந்து சிந்துபட்டி போலீஸார், இருவரின் சடலத்தையும் பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் தம்பதி, தங்களுடைய மகளுக்கு உறவினர் ஒருவரைத் திருமணம் செய்யப் பேசி நிச்சயம் முடித்ததுள்ளனர்.


 ஆனால், மகள் வேறொருவரைக் காதலித்திருக்கிறார். அது தெரிந்து கண்டித்தும், மகள் பெற்றோர் பேச்சை கேட்காமல் காதலனோடு சென்றுவிட்டதாக தெரிகிறது. அதனால் கடந்த சில நாள்களாக இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், தம்பதி நேற்று விஷம் குடித்துத் தற்கொலை செய்திருக்கிறார்கள். இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும், போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.