காதல் ஜோடியை கொடூரமாக தாக்கிய மர்ம நபர்கள்.. பகீர் வீடியோ வைரல்!!

271

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் காதல் ஜோடி சிக்கியது. கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் முதலில் ஜோடியை மோசமாகத் தாக்கி, இருவரையும் உட்கார வைத்தனர். வீடியோ வைரலானதை அடுத்து, நஜிபாபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.

தகவலின்படி, நஜிபாபாத் தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டம் அருகே காதல் ஜோடி அமர்ந்து இருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த சில இளைஞர்கள் காதல் ஜோடியை பிடித்துள்ளனர். இருவரையும் இளைஞர்கள் கடுமையாக தாக்கினர். இதையடுத்து அந்த இளைஞர்களும் காதல் ஜோடியை தோப்புக்கரணம் செய்ய வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. காதல் ஜோடி உடன் சண்டை போடும் வீடியோ வைரலானதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோ வைரலானதை அடுத்து, நஜிபாபாத் போலீசார் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்து நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட இளைஞர்களில் இருவர் சிறார்களாவர். ஃபசல்பூர் காஸ் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஷுஐப் மற்றும் ஷாபேஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இரு இளைஞர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 6 இளைஞர்கள் மீது நஜிபாபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.