கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி: கச்சதமாக வேலையை முடித்த கள்ளக்காதலன்!!

1084

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). இவரது மனைவி வினிதா(20). இந்த தம்பதிக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்ற நிலையில் அவரது நண்பர் ராகவேந்திரா அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது வினிதாவுக்கும் ராகவேந்திராவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் சமீபத்தில் ஊருக்கு வந்தார். அப்போது தனது நண்பன் ராகவேந்திராவுக்கும் தனது மனைவி வினிதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக மனைவியை விஜயகுமார் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி மனைவி வினிதா கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு செல்வது போல் சென்றுள்ளார். இந்நிலையில் விஜயகுமாரைச் சந்திக்க கடந்த மாதம் 18-ம் தேதி இரவு ராகவேந்திரா சென்றிருக்கிறார்.

அவருடன் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பரையும் உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது விஜயகுமாரை சமாதானம் செய்து மல்லகுண்டா அருகேயுள்ள பலக்கல்பாவி முருகர் கோயில் மலை அடிவாரத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைகேறியதும் விஜயகுமாரை கடுமையாக தாக்கி அவரை கொலை செய்துள்ளனர். இதையடுத்து, குழித்தோண்டி அரைகுறையாக சடலத்தை புதைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

மூன்று நாள்களுக்குப் பிறகே விஜயகுமார் கொலைச் செய்யப்பட்ட தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கு காரணமான ராகவேந்திரா, சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

ராகவேந்திராவிடம் போலீசார் நடத்த விசாரணையில் மனைவி வினிதா தூண்டுதலின் பேரிலே கொலை செய்ததாக கூறினார். இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் பதுங்கியிருந்த வினிதாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.