தமிழகத்தில்..
தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது, இளவட்டக் கல்லை தூக்கும் போட்டியும் நடைபெற்றது. இந்த போட்டியில், அதே கிராமத்தை சேர்ந்த பிரபு (29) என்பவர் கலந்து கொண்டார். அப்போது, இளவட்டக்கல்லை தூக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லுடன் சேர்ந்து பிரபு கீழே விழுந்தார்.
இதில் பிரபுவின் தலைப்பகுதியில் கல் விழுந்தது. உடனே அவரை மீட்டு, உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர்.
பொங்கல் விழா போட்டியில் இளவட்டக் கல்லை தூக்க முயன்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருநாவலுார் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.