திவ்யா துரைசாமி..
செய்தி வாசிப்பாளராக அறிமுகமான திவ்யா துரைசாமி, தற்போது இளசுகளின் பேவரைட் மாடல் அழகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், எதற்கும் துணிந்தவன், மாமன்னன், வாழை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
திவ்யா துரைசாமியின் திரைத்துறை பயணம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருகின்றனர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட திவ்யா துரைசாமியிடம்,
பட வாய்ப்புக்காக ஐட்டம் பாடலுக்கு நடனமாட நீங்கள் தயாரா? சமந்தா, நயன்தாரா போன்ற முன்னணி அப்படி நடிக்கிறார்கள். நீங்கள் அப்படி நடிக்க தயாரா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
பதில் அளித்த திவ்யா துரைசாமி , சமந்தா மற்றும் நயன்தாரா அவர்களுக்கு பிடித்து இருப்பதால் அப்படி நடிகர்கள். எனக்கு பிடித்த ஹீரோவுடன் அப்படி நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நானும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.