இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்… கணவரே கொலை செய்தது அம்பலம்!!

280

ஆஸ்திரேலியாவில், ஹைதராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், போலீசாரின் விசாரணையில், கணவரே இளம்பெண்ணைக் கொலைச் செய்தது தெரிய வந்துள்ளது.

மனைவியைக் கொலைச் செய்து விட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து தன்னுடைய மாமியாரிடம் குழந்தையை ஒப்படைக்க வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் கணவர். ஆஸ்திரேலியாவில், சைதன்யா தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் பக்லி நகரில் சாலையின் ஓரத்தில் சக்கர வண்டி ஒன்றில் இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கொலைச்செய்யப்பட்ட பெண் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்றும், 36 வயதான சைதன்யா என்பதும் தெரிய வந்தது.

இந்த செய்தி பரபரப்பான நிலையில், ஹைதராபாத்தில், இறந்த சைதன்யாவின் தொகுதி எம்எல்ஏ பண்டாரி லக்ஷ்மா ரெட்டி, அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். சைதன்யாவின் அஸ்தியை ஹைதராபாத்துக்குத் திருப்பி அனுப்பக் கோரி உடனடியாக வெளியுறவு அமைச்சகத்திற்கும் கடிதம் எழுதினார்.


இந்நிலையில், சைதன்யாவின் கணவர் ஆஸ்திரேலியாவில் இருந்து ஹைதராபாத் பறந்து வந்து குழந்தையை சைத்தன்யாவின் பெற்றோரிடம் ஒப்படைத்தார். தங்கள் மகள் சைதன்யாவைக் கொலைச் செய்ததை மருமகன் ஒப்புக்கொண்டதாக பெண்ணின் பெற்றோர்கள் தெரிவித்தனர். தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு கதறுகின்றனர் சைதன்யாவின் பெற்றோர்.