முன்னாள் காதலனுடன் காதலி தப்பியோட்டம்… தம்பியின் உடல் ஃபிரிட்ஜுக்குள்… தந்தை படுகொலை!!

366

போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அவர்களது இல்லத்தில் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது எட்டு வயது மகனும் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறுவனின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மில்லினியம் காலனியில் நடந்த இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இறந்த ரயில்வே ஊழியரின் மைனர் மகள் காணாமல் போனார்.

இறந்தவர், ராஜ்குமார் விஸ்வகர்மா, அவரது மனைவி இறந்ததைத் தொடர்ந்து தனது இரண்டு மைனர் குழந்தைகளுடன் வசித்து வந்தார் என்று காவல்துறை கண்காணிப்பாளர் ஆதித்ய பிரதாப் சிங் தெரிவித்தார்.

“வெள்ளிக்கிழமை, விஸ்வகர்மாவின் சகோதரருக்கு, விஸ்வகர்மாவின் 17 வயது மகளிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், பக்கத்து வீட்டுக்காரர் தனது தந்தையையும் சகோதரனையும் கொலை செய்ததாக கூறினார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் பிபரியா நகரில் வசிக்கும் விஸ்வகர்மாவின் சகோதரர் இது குறித்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்ததும், போலீசார் வீட்டிற்குள் நுழைந்து, ரயில்வே ஊழியரும், அவரது மகனும் கொல்லப்பட்டதைக் கண்டறிந்தனர்.


மகனின் சடலம் குளிர்சாதன பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், தந்தை-மகன் இருவரும் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவரின் மகள் குற்றம் சாட்டப்பட்டவருடன் காணாமல் போயுள்ளார். இது காதல் விவகாரம் என்று சந்தேகிக்கப்படும் வழக்கு என்ற போலீசார், அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை காலை விஸ்வகர்மாவின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

போலீஸ் அதிகாரியின் கூற்றுப்படி, சிறுமி கடந்த செப்டம்பர் 2023ல் குற்றம் சாட்டப்பட்டவருடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார், ஆனால் பின்னர் அவர், தன்னுடைய காதலன் மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தார். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.