இங்கிலாந்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம்பெண் பலியான சோகம்… சைக்கிளில் வீடு திரும்பிய போது பரிதாபம்!!

226

சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, டிரக் மோதி இந்திய மாணவி ஒருவர், இங்கிலாந்தில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள லண்டன் பொருளாதார கல்வி மையத்தில் பிஎச்டி படிப்பை படித்து வந்தவர் சேஸ்த கோச்சார் (33). இவர், அரியானா மாநிலம் குருகிராம் நகரை சேர்ந்தவர்.

இவர், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்து விட்டு, அமெரிக்காவின் பென்சில்வேனியா மற்றும் சிகாகோ பல்கலைக்கழகங்களிலும் படித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, லண்டனில் படித்து வந்த அவர், சைக்கிளில் கடந்த வாரம் தன்னுடைய வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவர் மீது லாரி ஒன்று மோதியது.

இந்த விபத்தில் கோச்சார் பலத்த காயமடைந்து உள்ளார். அவருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கணவர் பிரசாந்த் உடனடியாக அவரை மீட்க சென்றார்.


ஆனால், அதில் பலனில்லை. கோச்சார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அமிதாப் காந்த் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், தைரியம் மற்றும் திறமை வாய்ந்த கோச்சார் மிக இளம் வயதில் உலகை விட்டு சென்று விட்டார். அவருக்கு இரங்கல்கள் என்று தெரிவித்து உள்ளார்.

கோச்சார், 2021-23 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில், நிதி ஆயோக்கில் மூத்த ஆலோசகர் பணி ஒன்றில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்.

கோச்சாரின் தந்தை ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.பி.கோச்சார், இறுதி சடங்கு செய்வதற்காக லண்டனுக்கு சென்று அவருடைய மகளின் உடலை பெற்று கொண்டார்.