நடு வீதியில் முன்னாள் காதலியை காதலனுடன் சேர்த்து கண்ட துண்டாக வெட்டிச்சரித்த பௌத்த பிக்கு!

1018

தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட பௌத்த பிக்கு ஒருவர், ஆத்திரத்தில் அந்த பெண்ணை வெட்டிக் கொலை செய்துள்ளார்

தாய்லாந்தை சேர்ந்த பௌத்த பிக்கு உம் தீரென்ராம் (57) பிக்கு ஆகுவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். என்ன காரணமோ இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக் காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில் அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். ஆத்திரத்தில் தனது காரை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாயின் புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

தீரென்ராம் தன் காரிலிருந்த கத்தியை எடுத்து வலம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார். பின்னர் லம்பாய் வீட்டுக்குச் சென்ற தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.


பொலிசா தீரென்ராமை கைது செய்தனர். தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் பௌத்த பிக்கு ஆகுவதற்கு முன் லம்பாயை காதலித்ததாகவும், பிக்குவானதும் அவரைப் பிரிந்து விட்டதாகவும், லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப் போவதாகவும், அதை வெளியில் சொன்னால் பிக்கு வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்.

லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.