மனைவி மற்றும் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகன்!!

154

தேனி மாவட்டம் சிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாயி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா . இவருக்கும் சுரக்காபட்டி பூவேந்திரனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.

இவர்களுடைய மகன் 4 வயது கவின். கணவன் , மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரா, தந்தை மாயி வீட்டிற்கு சென்றிருந்தார்.

தேனி பழனிசெட்டிபட்டியில் பவித்ராவின் பாட்டி அம்மாபிள்ளை வீட்டிற்கு மாயி, பவித்ரா தனது மகனுடன் வந்திருந்தார். நேற்று மாலை பூவேந்திரன், நண்பர் முருகேசன் டூவீலரில் அம்மாபிள்ளை வீட்டிற்கு சென்றனர்.

பூவேந்திரன் வீட்டிற்குள் சென்று மாமனார், மனைவியுடன் குடும்பத்தகராறில் ஈடுபட்டார். தான் வைத்திருந்த கத்தியால் இருவரையும் வயிற்றுப் பகுதியில் சராமாரியாக குத்தினார். இதில் மனைவி, மாமனார் இருவரும் பலியாயினர். இருவரையும் கொலை செய்த பூவேந்திரன் டூவீலரில் தப்பி ஓடிவிட்டார்.

அவருடன் வந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் முருகேசனிடம் பூவேந்திரன் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.