அரிவாளால் மனைவியின் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவன்.. அடுத்து செய்த விபரீத செயல்!!

216

ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60). இவரது மனைவி தீப்தி(50). அவர்களுக்கு ஐந்து மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது.

வாய்த்தகராறு முற்றிய நிலையில், அடுப்படியில் இருந்த தீப்தியை ஷாஜி அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தீப்தியின் தலை துண்டானது. இதன் பின் தனது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் ஷாஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷாஜி வீட்டில் இருந்து சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் தீப்தி கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். படுக்கை அறையில் ஷாஜி தற்கொலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து வந்து ஷாஜி, தீப்தி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி தீப்தியை, ஷாஜி வெட்டிக்கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


மனைவியைக் கொலை செய்து கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.