காதலை ஏற்க மறுத்த இளம்பெண்… பாலியல் கொடுமை செய்து முகத்தில் இரும்பு ராடால் தன் பெயரை எழுதிய இளைஞன்!!

205

காதலை ஏற்காமல், திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண்ணைக் கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை இளம்பெண்ணின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞர் மீது உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், கெரி பகுதியை சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், தனது காதலைத் தெரிவித்துள்ளார். அமன் ஹூசைனின் காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அமன் ஹூசைனின் நடத்தை பிடிக்காததால், அப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இளம்பெண்ணின் மீது கோபத்தில் இருந்து வந்துள்ள ஹூசன், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கடத்தி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் இளம்பெண்ணின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் சூடான இரும்பு கம்பியால், அவரது முகத்தில் சூடு வைத்து, தனது பெயரை ஹூசைன் என்று அப்பெண்ணின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பித்து வந்த இளம்பெண், தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதையடுத்து கெரி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அமன் ஹூசைன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


இந்த சம்பவத்தில் அமன் ஹூசைனுக்கு உடந்தையாக, அவரது தாயாரும், சகோதரியும் இருந்தது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருக்கும் அமன் ஹூசனை போலீசார் தேடி வருகின்றனர்.