செல்போன பாக்காத.. கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு!!

212

கர்நாடகா மாநிலம் பெங்களூரு திப்பகொன்டனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண். இவரது மனைவி சுதா. இவர்களுடைய மகள் 18 வயது லிகிதா. இவர் படிக்காமல் தினமும் செல்போன் பயன்படுத்தி வந்தார்.

செல்போன் அதிகம் பாக்கதே… என லிகிதாவை அவரது பெற்றோர் கண்டித்தனர். பெற்றோர் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டே இருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இதுகுறித்து பெற்றோர், லிகிதாவை அழைத்து கண்டித்தனர். அப்போது செல்போனை எடுப்பதை தவிர்க்கும்படி புத்தகத்தை எடுத்து படிக்கும்படியும் கூறியுள்ளனர்.

இதனால் லிகிதா மனமுடைந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவரது அறை கதவு திறக்கப்படவில்லை. வாக்குப்பதிவு எந்திரங்கள் இதனால் பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.

அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது லிகிதா தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனைக்கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

லிகிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


அப்போது செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்து லிகிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.