இளம்பெண் படுகொலை.. தாயை கொல்ல நினைத்து மகளைக் கொன்ற கள்ளக்காதலன்!!

144

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசிக்கும் பெண் சாம்பா தேவி. அவளுடைய முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது கணவர் பீகார் மாநிலத்தில் வசிக்கிறார்.

அவருக்கு சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. சாம்பாதேவிக்கு ஜோதி என்ற 19 வயது மகள் உள்ளார். திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

அவர் அவ்வப்போது தனது தாய் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று மகள் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் அவரது கணவரும் இருந்தார். அந்த நேரத்தில், பாபி என்ற நபர் வீட்டிற்கு வந்து சாம்பாதேவியைக் கொல்ல முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சம்பாதேவியை காப்பாற்ற முயன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் ஜோதி மீது கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது.

இதனால் சுருண்டு விழுந்த பெண்ணை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதும் அவரது இறந்துவிட்டது தெரியவந்தது. விசாரணையில் பாபி – சாம்பாதேவிக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.

இதற்கிடையில், தேவி மற்றொரு இளைஞருடன் தொடர்பு வைத்திருந்தார். இதற்கிடையில், குற்ற வழக்கில் சிக்கிய பாபி சிறைக்குச் செல்லும் முன், தன் கள்ள்காதலி வேறொருவருவடன் உறவில் இருந்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொல்லச் சென்று, தற்செயலாக அவர் மகளைக் கொன்றுவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.