தாயை பலாத்காரம் செய்து, என்னை நிர்வாணப்படுத்தினார்… இளம்பெண் கண்ணீர் மல்க புகார்!!

233

ஹசன் எம்பி- பிரஜ்வல் ரேவண்ணா, தனது தாயை பலாத்காரம் செய்து, வீடியோ காலில் தன் ஆடைகளை களையுமாறு மிரட்டியதாக மேலும் ஒரு இளம்பெண் போலீஸில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சியின் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா (33). முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர், தனது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆதரவுடன் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோவாக பதிவு செய்து வன்கொடுமை செய்த புகாரில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் பிரஜ்வல், ரேவண்ணா ஆகியோர் மீது புகார் அளித்த பெண்ணை, கடத்தி, மிரட்டல் விடுத்த வழக்கில் எச்.டி.ரேவண்ணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அதேநேரத்தில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்ட பிரஜ்வலை பிடிக்கும் பணியில் கர்நாடகா போலீஸார் புளூகார்னர் நோட்டீஸ் வழங்கி, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிரஜ்வல், ரேவண்ணா ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் தாராளமாக முன்வந்து போலீஸில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களின் அடையாளங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.


அதன்படி, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண் கண்ணீர் மல்க போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அந்தப் பெண் கூறியதாவது

கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் எனது தாயை பிரஜ்வல், அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோர் பலாத்காரம் செய்தனர். மேலும் பிரஜ்வல், வீடியோ காலில் அழைத்து என் ஆடைகளை கழற்றும்படி கேட்பார்.

நான் மறுத்தபோது, என்னையும், என் தாயையும் மிரட்டினார். என் அம்மா ஒத்துழைக்காவிட்டால், கணவரின் வேலையை பறித்து விடுவேன் என்றும், மகளை பலாத்காரம் செய்துவிடுவேன் என்றும் பிரஜ்வல் மிரட்டினார்.

தொடர்ந்து பாலியல் தொல்லையும், மிரட்டல்களும் அதிகரித்ததால் ஒரு கட்டத்தில் நாங்கள் எங்கள் செல்போன் எண்ணை மாற்றினோம். எனது தாயை அடிமைப் போன்று தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

எனது தந்தையையும் தாக்கினர். பிரஜ்வல் வீட்டில் வேலை செய்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுவரை 3 பெண்கள் மட்டுமே தைரியமாக வெளியே வந்து புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் 3 பெண்கள் புகார் அளிக்கவில்லை. அவர்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்கள் தான்” என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறினார்.