ரயிலில் ஆபாச நடனம்… வைரலாகும் இளம்பெண்ணின் வீடியோ.. கடுப்பான பயணிகள்!!

119

சமீபகாலமாக மெட்ரோ ரயில், மின்சார ரயில் மற்றும் பிரபலமான பொது இடங்களில் சிலர் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் வீடியோ எடுத்து பொதுமக்களை துன்புறுத்தி வருகின்றனர். இணையத்தில் பிரபலம் அடைய அவர்கள் செய்யும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களிடம் வெறுப்புக்கு உள்ளாகின்றன.

இந்நிலையில் மும்பையில் மின்சார ரயில் மற்றும் சி.எஸ்.எம்.டி. ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அரைகுறை ஆடையுடன் பெண் ஒருவர் ஆபாசமாக நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போஜ்புரி பாடலுக்கு ஒரு பெண் மின்சார ரயிலில் நடனமாடுவதை வீடியோ காட்டுகிறது. இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பயணி ஒருவர், “மும்பையில் மின்சார ரயிலில் பயணிகளால் நிம்மதியாக பயணிக்க முடியாது.

வியாபாரிகள் மற்றும் பிச்சைக்காரர்கள் வரிசையில் இதுபோன்ற நபர்கள் ரீல் எடுத்து தொல்லை தருகின்றனர். இதுபோன்ற தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். .” இதேபோல் பலர் வீடியோ எடுப்பது என்ற பெயரில் பயணிகளை துன்புறுத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பொது இடங்களிலும், மின்சார ரயில் போன்ற பொது வாகனங்களிலும் ஆபாசமான மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வீடியோ பதிவின் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க மும்பை ரயில்வே கோட்ட மேலாளர் மும்பை ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே போலீஸாரும் உறுதியளித்துள்ளனர்.