நண்பர்களுடன் விருந்துக்கு சென்ற மருத்துவர்: கோபத்தில் கணவன் செய்த கொடுஞ்செயல்…!!!

115

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.

லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33 வயது சிவ கும்மி என்பவரே மருத்துவரான தமது மனைவி Gwendoline Amsrala என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு சிவ கும்மிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

UNLV மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் பயிற்சி நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு ஆம்ஸ்ரலா தமது நண்பர்களுடன் இரவு மது விருந்துக்கு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் கும்மிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், கணவன் – மனைவிக்கு இடையே சண்டையை மூட்டியுள்ளது. ஒருகட்டத்தில் தமது மனைவியை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அத்துடன் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவலும் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பகல் 8.15 மணிக்கு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, இறக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் இதுவரை இறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன் உடல் முழுவதும் தாம் கத்தியால் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் தான் சிவ கும்மி அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

பூட்டப்பட்ட படுக்கையறைக்குள் தமது மனைவியின் சடலத்திற்கு அருகே இருந்துகொண்டே 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மிக மோசமான நிலையில் இருந்த கும்மியை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும், அவரது மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் தெரியப்படுத்தினர்.

சிகிச்சையின் போதே கும்மி கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த மாதம் கிளார்க் கவுண்டி மாவட்ட சட்டத்தரணி அலுவலகத்துடன் கும்மி ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளார்.

இதனால் அவரது தண்டனைக் காலம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் 405 நாட்கள் தண்டனை அனுபவித்துவிட்டார் என்றும், இரண்டாம் நிலை கொலை வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.