எப்போ கல்யாணம்? தொடர்ந்து நச்சரித்து முதியவர் ஆத்திரத்தில் பக்கத்து வீட்டு நபர் செய்த கொடூரம்!!

275

45 வயதான சிரேகர் என்பவர் இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். அசிம் இரியாண்டோ என்ற 60 வயது முதியவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.

அசிம் பக்கத்து வீட்டுக்காரரான சிரேகரை பார்க்கும் போதெல்லாம், “எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறாய்?” என்று கேட்பது வழக்கம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29ம் தேதி முதியவர் வீட்டிற்குள் நுழைந்து கட்டையால் அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த ஆசிமின் மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சிரேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ​​”திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி கேட்டு கேலி செய்ததால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். அதனால் தான் அவரை கொன்றேன்” என்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.