பெற்ற மகளைக் கொன்ற இந்திய வம்சாவளி பெண் : சமீபத்திய தகவல்!!

257

இங்கிலாந்தில், பெற்ற மகளைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்

இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, மார்ச் மாதம் 4ஆம் திகதி, இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.

பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள்.

மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல், Shay Kang பரிதாபமாக பலியாகிவிட்டாள்.


தாய் கைது

இந்த துயர சம்பவம் தொடர்பாக Shay Kangஇன் தாயாகிய ஜஸ்கிரத் கௌர் என்னும் ஜாஸ்மின் கேங் (Jaskirat Kaur, also known as Jasmine Kang, 33) கைது செய்யப்பட்டார்.

குழந்தை Shay Kangஇன் மார்பில் கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அதாவது Shay Kang கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளாள்.

என்றாலும், ஜாஸ்மின், தனது குற்றம் செய்ததை ஒப்புக்கொள்ளவில்லை, எதற்காக குழந்தையை அவர் கொலை செய்தார் என்பதும் தெரியவரவில்லை.

சமீபத்திய தகவல்

இந்நிலையில், ஜாஸ்மின் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். என்றாலும், தன் கவனக்குறைவால் குழந்தை பலியானதாக அவர் ஒப்புகொண்டுள்ளார், தான் குழந்தையைக் கொலை செய்ததாக அவர் கூறவில்லை.

அக்டோபர் மாதம் 25ஆம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.