சர்ச்சையைக் கிளப்பிய சண்டை “எல்லாமே ரெண்டாம் பட்சம் தான்” பரபரப்பைக் கிளப்பிய மணிமேகலை!!

153

“எல்லாமே ரெண்டாம் பட்சம் தான். சுயமரியாதை தான் ரொம்ப முக்கியம். தொகுப்பாளினி ரொம்ப ஓவராக பண்றாங்க” என்று சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார் மணிமேகலை.

மாமியார், மருமகள் மட்டும் கிடையாது.. பெண்கள் என்ன தான் சகஜமாக பேசிக் கொண்டிருந்தாலும் இரண்டு பெண்களுக்குள் ஒத்து வராது என்று பலரும் இதற்கு கமெண்ட் தெரிவிக்க, இதெல்லாம் டிஆர்பி எகிற வைப்பதற்கான யுக்தி தான்ப்பா. யாரும் ஃபீல் பண்ணாதீங்க.

இப்படி தான் கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி பப்லுவும், சிம்புவும் அடிச்சுக்கிட்டாங்க. இது விஜய் டிவியோட அந்த காலத்திலிருந்தே கடைப்பிடிக்கும் தந்திரம் என்று கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.

2019ல் தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதன் ஆரம்ப இயக்குநர், தயாரிப்பாளர்களை எல்லாம் கழற்றி விட்ட பின்னர் ரசிகர்களைக் கவர தவறியது என்கிறார்கள்.

இந்நிலையில் 5வது சீசன் ஆரம்பிக்கும் போதே பிரச்சனை தான் என்பது போல, வெங்கடேஷ் பட் வெளியேறினார். இதைத் தொடர்ந்து தற்போது விஜே மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.


இதுகுறித்து மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘சுயமரியாதைதான் முக்கியம்’ என்றும் இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார் என்றும் வேதனையுடன் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில் மணிமேகலை, “இனி குக்வித் கோமாளி நான் பங்கேற்கப்போவதில்லை. 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சி ஆரம்பாகி நடைபெற்று வருகிறது. நேர்மையுடனும், கடின உழைப்புடனும் எனது 100% உழைப்பைப் போட்டு இந்நிகழ்ச்சியில் பணியாற்றியிருக்கிறேன்.

சுயமரியாதையை விட இங்கு எதுவும் பெரிதில்லை. பிரபலம், பணம், வாய்ப்புகள், தொழில் இவையெல்லாம் எனக்கு இரண்டாவது விஷயம்தான். சுயமரியாதைதான் எனக்கு முதன்மையானது.

அது எனக்குக் கொடுக்கப்படாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அதன் காரணமாகவே ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிருந்து வெளியேறுகிறேன்.

இந்த சீசனில் ‘குக்’ ஆக இருக்க வேண்டிய மற்றொரு பெண் தொகுப்பாளர் என் வேலையில் ஆதிக்கம் செலுத்தினார். அவர் குக் என்பதையே மறந்து, தொகுப்பாளரின் வேலைகளை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளைச் செய்கிறார்.

இதுதொடர்பாக எனது உரிமையைக் கேட்பதும், எனக்காக நான் குரல் கொடுப்பதும் இந்நிகழ்ச்சியில் தவறாக மாற்றப்பட்டது. எனக்காக நான் குரல் கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன்.

யாருக்காகவும் அதை நான் நிறுத்தமாட்டேன். இப்போது நடப்பது முன்பு இருந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியாக இல்லை. முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

2010-ம் ஆண்டு முதல் நான் தொகுப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது 15 ஆண்டுகால இந்தப் பயணத்தில் இப்படியொரு முதிர்ச்சியற்ற நடத்தைகளை நான் பார்த்ததே இல்லை.

இருப்பினும், எனக்கு இதைச் செய்த நபருக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மற்றவர்கள் துன்பப்படாமல் இருக்க கடவுள் அவருக்கு அதிக நிகழ்ச்சிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கட்டும்.

வாழு, வாழ விடு.என்னை ஆதரித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள்” என்று பதிவிட்டு தனது ஆதங்கத்தைக் கொட்டிருக்கிறார்.