200 கிராம் தங்கத்தில் புடவை நெய்து அசத்திய நெசவாளி.. அதன் விலை எவ்வளவு தெரியுமா?

243

நெசவாளி ஒருவர் 200 கிராம் தங்கத்தில் திருமண புடவை நெய்தது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

200 கிராம் தங்கத்தில் புடவை

இந்திய மாநிலமான தெலங்கானா, நாட்டுப்புற கலைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி தொழிலுக்கு புகழ்பெற்றது. இதனால் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏராளமான பாராட்டுகளை பெற்றுள்ளது.

அந்தவகையில் திறமையான நெசவாளர்களில் ஒருவரான ராஜண்ணா சிரிசில்லா மாவட்டத்தில் உள்ள சிரிசில்லாவைச் சேர்ந்த நல்ல விஜய் குமார் என்பவர் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் விதமாக தங்கப் புடவை நெய்து பேசப்பட்டு வருகிறார்.

இவர், ஏற்கெனவே பல விஐபிக்களின் புகைப்படங்கள், பாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணர் படங்கள் ஆகியவற்றை புடவைகளில் நெய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளார்.

அந்தவகையில், சுமார் 6 மாதங்களுக்கு முன்பு, ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்திற்காக விஜய் குமாரிடம் தங்கப் புடவையை நெய்யுமாறு கேட்டுள்ளார்.


இதற்காக 200 கிராம் தங்கத்தைக் கொண்டு 10 முதல் 12 நாட்கள் வரை வடிவமைத்து புடவையை நெசவு செய்தார். 5.5 மீட்டர் நீளம் மற்றும் 49 அங்குல அகலம் கொண்ட இந்த புடவை மொத்தம் 900 கிராம் எடை கொண்டது.

செப்டம்பர் 17-ம் திகதி திருமணத்துக்காக நெய்யப்பட்ட இந்தப் புடவையின் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். தங்கத்தால் புடவை நெசவு செய்யும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நெசவாளி விஜய் தனது வேலையில் செய்து காட்டியுள்ளார்.