நள்ளிரவில் கள்ளக்காதலன் வீட்டு கதவைத் தட்டிய ரம்யா… கணவனைக் ஸ்கெட்ச் போட்டு செய்த கொடூரம்!!

172

தனது கணவனைக் கள்ளக்காதலன் கொலைச் செய்ததால், நள்ளிரவில் போலீஸ் வேடத்தில் கள்ளக்காதலனின் வீட்டுக் கதவைத் தட்டிய ரம்யா, கதவு திறக்கப்பட்டதும் நான் போலீஸ் விசாரிக்க வேண்டும் என கூறி, அடியாட்களுடன் 3 பேரை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த சின்னகாவனம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (26). இவர் பொன்னேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளி.

இவருக்கும், மீஞ்சூரை அடுத்த தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான விஷ்ணுவுக்கும் புழல் சிறையில் இருந்த போது தொடர்பு ஏற்பட்டது. இதற்கிடையில், லட்சுமணனின் மனைவி ரம்யாவுடன் விஷ்ணுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை தட்டிக் கேட்ட லட்சுமணனை, கடந்த ஜூன் 23ம் தேதி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விஷ்ணு கொலைச் செய்தார். இந்த வழக்கில் விஷ்ணு, சகோதரர் விஷால் உள்ளிட்ட 5 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே விஷால் வீட்டுக்கு சென்ற மர்ம கும்பல், வீட்டில் இருந்த 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

விஷ்ணுவின் தந்தை ரகு (48), தாய் ஜெயபாரதி (42), விஷாலின் மனைவி அர்ச்சனா (21) ஆகியோர் பலத்த காயங்களுடன் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் லட்சுமணனின் மனைவி ரம்யா தனது காதல் கணவர் லட்சுமணனை கொலை செய்ததற்கு பழிவாங்க தனது கணவரின் சகோதரர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் விஷ்ணுவின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் கள்ளக்காதலனின் வீட்டிற்கு சென்ற ரம்யா, தான் ஒரு பெண் போலீஸ் என்றும் விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போலீஸ் என்று கூறியதால் வீட்டின் கதவை திறந்து ரம்யாவிடம் பேசியுள்ளனர்.

அப்போது ரம்யாவுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென வீட்டில் இருந்த 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து மீஞ்சூர் போலீசார் ரம்யா (24), மாறன்ராஜ் (29), திருப்பதி (22) ஆகியோரை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.