அமேதி கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளக்காதலைத் தொடராததால் குடும்பத்தோடு கொன்ற கொடூரம்!!

199

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளி கொலைச் செய்ததை ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் விசாரணையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது.

கடந்த சில மாதங்களாக மனவருத்தம் ஏற்பட்ட நிலையில், குடும்பத்தினர் அனைவரையும் கொலைச் செய்தேன்” என்று குற்றவாளி வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர் .

முன்னதாக நேற்று முன் தினம் மாலை உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள பவானி நகரில் வசித்து வந்த சுனில் குமார் என்ற பள்ளி ஆசிரியரையும், அவருடைய மனைவி பூனம், 2 மற்றும் 6 வயதில் உள்ள இரண்டு மகள்கள் என 4 பேரும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் சந்தன் என்பவர் மீது போலீசார் சந்தேகப்பட்ட நிலையில், சந்தன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுனில் குமாரின் குடும்பத்தாரை சந்தன் வர்மா கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சுனில் குமாரின் குடும்பத்தினரை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள சந்தன் வர்மா திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.


“சந்தன் வர்மா தன்னை மிரட்டுவதாகவும், தங்கள் குடும்பத்தினருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு சந்தன் தான் பொறுப்பு என்றும் சுனில் குமாரின் மனைவி பூனம் பார்தி கடந்த இரண்டு மாதங்களுக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கு காரணம் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி ரேபரேலியில் உள்ள மருத்துவமனைக்கு தனது கணவருடன் பூனம் பார்தி சென்றுள்ளார். அப்போது பூனம் பார்தியிடம் சந்தன் வர்மா தவறாக நடந்து கொண்டார்.

சந்தன் பூனத்தையும் அவரது கணவரையும் அறைந்ததாகவும், இதைத் தட்டிக் கேட்டதாகவும், இதைப் பற்றி போலீசில் புகார் சொன்னால் உன் குடும்பத்தைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் பூனம் கூறியதைத் தொடர்ந்து எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், “கடந்த 2 வருடங்களாக பூனத்துடன் கள்ள உறவு இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, உறவை பூனம் தொடர மறுத்ததால் குடும்பத்தோடு கொலைச் செய்வதாக மிரட்டிப் பார்த்தும் பூனம் உறவைத் தொடரவில்லை. இதனால் ஆத்திரத்தில் குடும்பத்தோடு கொலைச் செய்தேன்” என்று சந்தன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.