பியூட்டி பார்லரில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் இடையூறாக வந்த கணவனுக்கு நேர்ந்த கதி!!

171

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே கணபதிபட்டி காலனியை சேர்ந்தவர் ராஜாராம் (30). கட்டிட தொழிலாளி இவர், உள்ளூரில் வேலை இல்லாததால், கோவைக்கு அடிக்கடி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கணவன் அடிக்கடி கோவை சென்று வருவதால், பியூட்டி பார்லர் வைப்பதற்காக அரூரில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றில் தமிழ் இலக்கியா பயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது, சரவணகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளடைவில் இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் தமிழ் இலக்கியாவின் கணவர் ராஜராமுக்கும், கள்ளக்காதலன் சரவணக்குமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.

அப்போது இவர்களது கள்ளக்காதல் விவகாரம் ராஜராமுக்கு தெரியவந்தது. இதில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கணவர் தொடர்ந்து தகராறு செய்து வருவது குறித்து தமிழ் இலக்கியா தனது கள்ளக்காதலன் சரவணக்குமாரிடம் புகார் கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் ராஜாராமை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.


அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவையில் வேலையை முடித்து விட்டு தர்மபுரிக்கு ராஜாராம் வந்த போது, நண்பர் என்ற முறையில் ராஜாராமை சரவணக்குமார் மது அருந்த அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர் அதிகளவு மது போதைக்குள்ளாக்கி, வீட்டில் இறக்கி விடுவதாக கூறி ராஜாராமை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

கல்லடிப்பட்டி பகுதியில் இவர்கள் சென்றுக் கொண்டிருந்த போது, போதையில் ராஜராமுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அருகே இருந்த கல்லை எடுத்து ராஜாராமின் தலையில் போட்டு, அவர் துடிதுடித்து உயிரிழந்ததையும் உறுதிசெய்துள்ளார் தமிழ் இலக்கியாவின் கள்ளக்காதலன் சரவணக்குமார்.

போலீசாரின் விசாரணையில் இருவரும் கொலைச் செய்ய திட்டமிட்டது, கொலைச் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் தமிழ் இலக்கியாவையும், அவரது கள்ளக்காதலன் சரவணகுமாரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.