100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள்… கைதான இளம்பெண்ணின் செல்போனில் அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள்!!

178

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட மஞ்சுளாவின் செல்போனில் பல அரசியல்வாதிகளின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் மாலிகய்யா குத்தேதாரை மிரட்டிப் பணம் பறிக்க முயற்சி செய்து கைதான நல்பாட் பிரிகேட் தலைவி மஞ்சுளாவைப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பெங்களூரு விஜயநகர் காலனியில் குடியிருப்பவர் சிவராஜ் பாட்டீல்(35). இவரது மனைவி மஞ்சுளா(30).

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் குடும்பத்தினரின் நல்பாட் பிரிகேட் அமைப்பின் தலைவியாக இருந்த மஞ்சுளா, முன்னாள் அமைச்சர் மாலிகய்யா குத்தேதாரின் மகனுடன் நெருங்கி பழகி வீடியோ எடுத்ததால், அவரை கைது செய்ததாக தகவல் வெளியானது.

அவர் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக மாலிகய்யா குத்தேதாரை மஞ்சுளா மிரட்டி வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் மாலிகய்யா குத்தேதாருக்கு மஞ்சுளா வீடியோ கால் செய்தும், ஆபாச மெசேஜ் அனுப்பியும் நெருக்கமானார்.

மாலிகய்யா குத்தேதாரின் செல்போன் உரையாடல், வீடியோ கால் தகவல்களை மஞ்சுளா பதிவு செய்து கொண்ட நிலையில், மாலிகய்யா குத்தேதாரின் மகன் ரிதேஷ் குத்தேதாரை சந்தித்து இந்த வீடியோ கால், செல்போன் உரையாடலைக் காண்பித்தார்.


ரூ.20 லட்சம் கொடுக்காவிட்டால், சமூக வலைதளங்களில் இந்த ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி உ ள்ளார். இந்த மோசடிக்கு மஞ்சுளாவின் கணவர் சிவராஜ் பாட்டீலும் உடந்தையாக இருந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ரிதேஷ் குத்தேதார் பெங்களூரின் சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் செய்தார். உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார், ரூ.20 லட்சம் பணம் கொடுப்பதாக கூறி மஞ்சுளாவையும், அவரது கணவரையும் பெங்களூருக்கு வரவழைக்கும்படி ரிதேஷிடம் கூறினார்.

ரிதேஷூம் நேரில் வந்து பணத்தை வாங்கிச் செல்லும் படியும், அதன் பின்னர் வீடியோக்களை அழித்து விட வேண்டும் என்றும் அவர்கள் நம்பும் படி பேசினார்.

நேரில் பணம் வாங்க வந்திருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். மஞ்சுளா, சிவராஜ் பாட்டீல் ஆகிய இருவரிடம் இருந்தும் 6 ஸ்மார்ட் போன்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அந்த செல்போன்களில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அந்தரங்க வீடியோக்கள் இருப்பதைப் பார்த்து போலீசார் அதிர்ந்தனர். அவர்களையும் மிரட்டி பணம் பறிக்க முயற்சித்து திட்டமிட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. தான் மற்றவருக்கு அனுப்பிய மெசேஜ்களை மஞ்சுளா அழித்துள்ளார். அவற்றை மீட்டெடுக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர்.