சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்.. 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்!!

23

தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று திடீரென கல்லூரி விடுதியின் 4 -வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால், இவருக்கு கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பிரபு அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர், தொடர்ந்து சூப்பர் பவர் வீடியோக்களை பார்த்து வந்ததுடன், சூப்பர் பவர் தனக்கு இருப்பதாகவும் நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும், தனக்கு யாரோ சூனியம் வைத்ததாகவும், கடந்த வாரம் சூனியத்தால் பாதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து பொலிஸாரிடம் பிரபு கூறுகையில், “தனக்கு சூப்பர் பவர் இருப்பதால் எந்த கட்டடத்தின் மேல் இருந்தும் என்னால் குதிக்க முடியும்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.