டாக்டர் கனவு நிறைவேறல.. மாணவி எடுத்த விபரீத முடிவு!!

82

டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாத காரணத்தால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் கலபுரகி டவுனை சேர்ந்தவர் தனுஜா. இவர் பெங்களூருவில் ஒரு விடுதியில் தங்கியிருந்து வந்ததாக தெரிகிறது. டாக்டர் படிக்க ஆசைப்பட்ட அவர் கர்நாடக அரசின் பொது நுழைவுத்தேர்வு (சி.இ.டி.) எழுதினார்.

2 முறை தேர்வி எழுதியும் குறைந்த மதிப்பெண்களையே எடுத்திருந்தார். இதனால் இருமுறையும் எம்.பி.பி.எஸ். சீட் கிடைக்காமல் அவரது டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாமல் போனது.

இதன் காரணமாக மனம் உடைந்து காணப்பட்ட அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர். இதற்கிடையே தனுஜா நேற்று பெங்களூருவில் இருந்து தனது சொந்த ஊரான கலபுரகிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.

இந்த ரயில் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் சென்று தான் மீண்டும் கர்நாடக எல்லைக்குள் வரும். அதுபோல் அந்த ரயில் அனந்தபூர் மாவட்டம் ராயதுர்கா அருகில் சென்று கொண்டிருந்தது.

அந்த சமயத்தில் தனுஜா, தனது பெற்றோரிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, டாக்டர் ஆகும் கனவு நிறைவேறாததால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.


பின்னர் அவர் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ரயில்வே தண்டவாளத்தில் தனுஜா பிணமாக கிடந்ததை பார்த்த அனந்தபூர் ரயில்வே போலீசார், ரயிலில் இருந்து இளம்பெண் தவறி விழுந்து இறந்ததாக கருதி விசாரணை நடத்தினர்.

ஆனால் இது குறித்து தனுஜாவின் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில், டாக்டராகும் கனவு நிறைவேறாத அவர் மனம் உடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

டாக்டர் கனவு நிறைவேறாத விரக்தியில் மாணவி ஓடும் ரயிலில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.