டீ குடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி… 3 பேர் கவலைக்கிடம்!!

196

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டம் அம்பாபுரா நல்டா கிராமத்தில் வசித்து வருபவர் 53 வயது தரியா(53). இவரது மருமகள் சாந்தா வயது 33. இவர் டிசம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று டீ போட்டுள்ளார்.

அப்போது, தவறுதலாக டீ தூளுக்கு பதிலாக கரையான் விரட்டி மருந்து( பூச்சிக்கொல்லி) மருந்தை கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனை குடித்த தரியா, மருமகள் சாந்தா, சாந்தாவின் மகன் 14 வயது அக்ஷ ராஜ் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அதே நேரத்தில் அந்த சமயத்தில் அவர்களது வீட்டிற்கு வந்திருந்த பக்கத்துவீட்டுக்காரர் உட்பட மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்ச்சம்பவம் குறித்து போலீசார் இந்த தேநீரில், கரையான் மருந்து கலக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சமையல் அறையில் கறுப்புப் பையில் கரையான் மருந்து வைக்கப்பட்டு இருந்ததும், அதுவும் தேயிலை இலை போல இருந்தது தான் காரணம் எனத் தெரியவந்தது.


தேயிலை இலைகளுக்கு அருகில் இந்த நச்சு விரட்டியை யாராவது வைத்திருப்பார்களா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது எனக் கூறியுள்ளார்.