மனைவியை வெட்டிக்கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

266

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரையை அடுத்த லட்சுமி நகர் பகுதியில் கணவன் மனைவியை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கடை நடத்தி வரும் சிலம்பரசன், மனைவி அகிலாண்டேஸ்வரி மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு சென்ற சிலம்பரசன், இன்று காலை வெளியே வராத நிலையில், அறையை விட்டு வெளியே வந்து பார்த்தபோது மகள், ​​

தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், தந்தை அருகில் தூக்கில் தொங்கியபடியும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணையில் அகிலாண்டேஸ்வரிக்கும், சிலம்பரசனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்ததாகவும்,

சிலம்பரசனின் குடிப்பழக்கம் காரணமாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.