கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை மகன், மகள் உயிர் தப்பினர்!!

23

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் கணேசன்(45). இவரது மனைவி முத்துமாரி(35). இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணேசனுக்கு அதிகளவில் கடன் பிரச்னை இருந்து வந்ததாகவும், மேலும் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்கு செலவு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் மனமுடைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து, தென்னை மரத்திற்கு போடக்கூடிய பூச்சி மாத்திரையை நேற்று அதிகாலை 5 மணியளவில் அனைவருமே சாப்பிட்டனர்.

இதில் முத்துமாரி, கணேசன் ஆகிய இருவரும் சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். மகன், மகள் உயிர் தப்பினர்.