இளம்பெண்கள், மாணவிகள் உஷார்.. இளம்பெண் பரிதாபமாக மரணம்!!

82

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி புதுப்பாடி பகுதியில் வசித்து வருபவர் விஜயன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதுப்பாடி பிராந்திய கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார்.

இவருடைய மனைவி சுதா (33). இவர்களுக்கு ஸ்டாலின் என்ற மகனும், மும்தாஸ் என்ற மகளும் உள்ளனர். சுதா இரவு 11 மணிக்கு வெளியே சென்று விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் சுதா புதுப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்றுக் கொண்டிருந்த போது அவரது கழுத்தில் அணிந்திருந்த துப்பட்டா ஸ்கூட்டரின் பின் சக்கரத்தில் சிக்கி விட்டது.

இதனை கவனிக்காமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சுதா, துப்பட்டா கழுத்தை இறுக்கியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்