கணவரின் பிரிவுபச்சார விழாவில் திடீரென சுருண்டு விழுந்து மனைவி மரணம்!!

161

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா நகரில் மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் தேவேந்திர சாண்டல். இவருடைய மனைவி டீனா.

இதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக தனது பணியில் இருந்து ஓய்வு காலத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் பிரிவுபச்சார விழா நடத்தப்பட்டது. இந்த வழியனுப்பு விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டார்.

அவருடன் உறவினர்கள், நண்பர்கள் சூழ விழா நடைபெற்று கொண்டிருந்தது. தம்பதியர் இருவரும் மாலை சூடி கோலாகலமாக விழா நடந்து கொண்டிருக்க புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும்படி தம்பதியை கேட்டு கொண்டனர்.

இதனால், இருவரும் எழுந்து நின்றனர். அப்போது, நிற்க சிரமப்பட்ட டீனா மயக்கம் வருவதுபோல் இருப்பதாகக் கணவரிடம் கூறியிருக்கிறார். அவரை அமர வைத்து விட்டு, தண்ணீர் கொண்டு வரும்படி கணவர் கூறினார்.

சுற்றியிருந்தவர்களில் டீனாவை புகைப்படத்திற்கு ஏதுவாக புன்னகைக்கும்படி கூறியுள்ளனர்.


டீனாவும் அதற்கு ஏற்ப சிரிக்க முயற்சி செய்து முடியாமல் மேஜை மீது சரிந்து கீழே விழுந்துள்ளார். இதனால் பதறியபடி அவரது கணவரும், உறவினர்களும் உடனடியாக டீனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொண்டு வரும் வழியிலேயே டீனா உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளனர்.

விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர். உடல்நிலை சரியில்லாத டீனாவுக்காக அவருடைய கணவர், முன்பே ஓய்வு பெற்று அவரை கவனித்து கொள்ள முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில் அது பெரும் சோகத்தில் முடிந்த காட்சி அங்கிருந்தவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.