மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள உத்வத் கிராமத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உள்ளூர் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளியில் கணித தேர்வு நடந்தது.
அப்போது தேர்வு அறையில் மாணவன் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இதைப் பார்த்த ஆசிரியை மாணவனிடம் இருந்து செல்போன் மற்றும் விடைத்தாளை எடுத்துள்ளார்.
பின்னர், மாணவனை கடுமையாக எச்சரித்துள்ளார். மேலும் வேறு விடைத்தாளையும் கொடுத்து அதில் எழுதச் சொன்னார். இதனால் விரக்தியடைந்த மாணவன் மாற்று விடைத்தாளில் எழுதினார்.
பின்னர் வீட்டிற்கு சென்ற மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு அறையில் செல்போன் பிடித்து ஆசிரியர் எச்சரித்ததால் விரக்தியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவனின் இந்த முடிவு குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.