பெண் காவலரின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. போராட்டத்தில் குதித்த உறவினர்கள்!!

149

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த ஒட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் – முருகம்மாள் தம்பதிகளின் மகள் சுகன்யா (27) என்பவர் செங்கம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் செங்கம் அடுத்த கொட்டாவூர், கொ-அண்ணாநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவி – லலிதா தம்பதிகளின் மகன் விஜய் (28) ஆகியோருக்கு கடந்த 23/04/2024 அன்று திருமணம் நடைபெற்றது.

செங்கம் டவுன் திருவள்ளூர் நகரில் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து கடந்த 6 மாத காலமாக கணவன் மனைவியும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி விஜய், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் இரவோடு இரவாக உடலை கைப்பற்றி விஜய் உறவினர்களுக்கு சொல்லாமல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் அறிந்த விஜய் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் இறந்த விஜய் மனைவி சுகன்யா மீது சந்தேகம் அடைந்து இருவருக்கும்


தகராறு ஏற்பட்டு விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சுகன்யா உடன் இணைந்து வேறு யாரோ குற்றச்செயலில் ஈடுபட்டாரா என்று உறவினர்கள் சுகன்யாவை தேடியுள்ளனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் சுகன்யா இருப்பதாகவும் என காவல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மேலும் இறந்த விஜயின் மனைவி என் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று காவல் நிலையத்தில் தனக்கு பாதுகாப்பு தேடி தஞ்சம் அடைந்துள்ளார்.

காவலர் சுகன்யாவுக்கு காவல் நிலையம் அடைக்கலம் கொடுத்திருப்பதாக கூறி இறந்த விஜயின் பெற்றோர் மற்றும் உறவினர் மகனுக்கு நீதி கேட்டு காவல் நிலத்தில் குவிந்துள்ளனர்.

இறந்த விஜயின் பெற்றோருக்கு காவல்துறையினர் முறையாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், பிரோத பரிசோதனை ஆய்வுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என அலட்சியத்துடன் தெரிவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.