கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த நட்சத்திரா. கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரியும் கிருஷ்ணமூர்த்தியை கடந்த 2 வருடங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது.
இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்குத் தெரிய வந்தபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதைத் தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் கடந்த ஒரு மாதமாக இளம்பெண்ணை தங்கள் வீட்டில் அடைத்து வைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், கிருஷ்ணமூர்த்தியை மணந்து, பாதுகாப்பு கோரி பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்.
பெண்ணின் பெற்றோர், தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், கல்லூரி சான்றிதழ்கள் அவர்களிடம் இருப்பதால், கல்லூரி படிப்பைத் தொடர உதவுமாறும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.