திரிபுராவின் செபாஹிஜாலா மாவட்டத்தில் கடனை திருப்பிச் செலுத்தாததற்காக ஒரு பெண் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு, அவரது தலையை பாதியாக மொட்டையடிக்கப்பட்டது.
லால்சிங்முரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் கணவர், உள்ளூர் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அவர் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை.
இந்த சூழ்நிலையில், அந்தப் பெண் சமையலறையில் இருந்தபோது, சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த சில பெண்கள் அவரது வீட்டிற்கு வந்து, கடனை உடனடியாக திருப்பிச் செலுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, அந்தப் பெண் வீட்டை விட்டு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்.
அவரது தலையில் பாதியை மொட்டையடிக்கவும் செய்தனர். இந்நிலையில், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மகளிர் போலீசார், அந்தப் பெண்ணை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.