58 மணி நேரம் முத்தமிட்டு கின்னஸ் சாதனை படைத்த தம்பதியர் விவாகரத்து!!

7

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.. ஒரு அளவுக்கு மேல் இருந்தால் ஒரு கட்டத்தில் எதுவுமே உபயோகப்படாது. இதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளனர் தொடர்ந்து 58 மணி நேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்த தம்பதியினர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு விஷயங்களில் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த எக்கச்சாய், டிரமாராட் என்ற தம்பதியினர் 58 மணி நேரம் 35 நிமிடங்கள் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை படைத்தனர்.

சமீபத்தில் இந்த தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர்கள் காதலுக்கும், அர்ப்பணிப்பிற்கும் தாங்கள் எடுத்துக்காட்டாக விளங்கினாலும்,

தவிர்க்க முடியாத சில காரணங்களால் பிரிவதாக தெரிவித்துள்ளனர். பிரிந்தாலும் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் மரியாதையும் குறையாது எனவும் கூறியுள்ளனர்.