இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த கொடூரம்!!

7

ஆடாதடா ஆடாதடா மனிதா என்று காலத்துக்கும் நிற்கிற மாதிரியான பாடல்கள் எல்லாம் தமிழில் மட்டும் தான் வெளிவந்திருக்கும் போல.

நாளுக்கு நாள் விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கையில், மனிதன் மட்டும் மீண்டும் கற்காலத்தை நோக்கி பயணப்படுகிறது போல் தெரிகிறது.

சமீபமாக நாடு முழுவதுமே ரீல்ஸ் மோகத்தால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். பிளாட்பாரத்தில் ரயில் கிளம்புகையில், ஜன்னலோரத்தில் அமர்ந்திருப்பவரை அடித்து விட்டு அதை வீடியோவாக பதிவிடுகிறான் ஒரு இளைஞன்.

கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய ஆசைப்பட்டு மலை உச்சியில் இருந்து அருவியில் குதித்த இளம்பெண் மருத்துவர் உயிரிழந்த நிலையில்,

அடுத்த அதிர்ச்சியாக பீகார் மாநிலத்தில் பணியில் இருக்கும் போது இன்ஸ்டாகிராமில் பதிவிட ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த பெண் சப் – இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்தில் உள்ள பஹார்பூர் காவல் நிலையத்தில் பிரியங்கா குப்தா என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இவர் பணி நேரத்தில் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வந்துள்ளார். தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், அவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலானதால் அவருக்கு ரீல்ஸ் மோகம் அதிகரித்துள்ளது.

ஒரு கட்டத்தில் தன்னுடைய பணிகளையும் மறந்துவிட்டு, தொடர்ச்சியாக அடிக்கடி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார்.

தன்னுடைய வீடியோக்களுக்கு பெரும்பாலும் பாலிவுட் பாடல்களை பயன்படுத்தினார். இது மாவட்ட எஸ்பியின் கவனத்திற்கு சென்ற நிலையில் பிரியங்காவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.