இமானுவேல் மேக்ரோன்………..
உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள Elysee அரண்மனையை விட்டு வெளியேறிய அவர் Versailles ல் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் இருந்தவாறு பணியாற்றி வருகிறார்.அத்துடன் அவரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.இந்நிலையில் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் தனது Twitter பக்கத்தில் தனது நாட்டு மக்களுக்காக வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது உங்களை தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.இந்த வைரஸ் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். நான் மிகவும் பாதுகாப்பையுடனும் கவனத்துடனும் இருந்தேன். எல்லாவற்றையும் மீறி எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவேளை கவனக்குறைவின் காரணமாக இருக்கலாம்.தற்போது நான் நன்றாக இருக்கிறேன்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஏனையோரைபோல எனக்கும் சோர்வு,தலைவலி,வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளன. வைரஸ் பாதிப்பு காரணமாக எனது செயல்பாடு கொஞ்சம் தாமதமாகி விட்டது.ஆனால் தொற்றுநோய் அல்லது பிரெக்சிட் போன்ற முன்னுரிமை சிக்கல்களை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன் என கூறியுள்ளார்.

— Emmanuel Macron (@EmmanuelMacron) December 18, 2020