9 வயதில் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் சம்பாதித்து காட்டி அசத்திய சிறுவன் : எப்படி தெரியுமா?

362

ரியான் காஜி..

இந்த ஆண்டு யூ டியூப்பில் அதிகம் சம்பாதித்த பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் முதல் இடம் பிடித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூஜெர்சியைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூ டியூபர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

அதில் இந்த ஆண்டும் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார்.


ரியான்ஸ் வோர்ல்ட் என்ற யூ டியூப் சேனலை துவங்கியிருக்கும் ரியான் காஜி குழந்தைகளின் விளையாட்டுச் பொருட்களை வாங்கி அதை திறந்து பார்த்து அதில் தனக்கு பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து வீடியோ வாயிலாக கூறுவான்.

ரியானின் இந்த வீடியோக்களை 1200 கோடி முறை பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். சேனலை 4.17 கோடி பேர் பின்பற்றுகின்றனர்.

இதன் மூலம் ஆண்டு 220 கோடி ரூபாய் அளவிற்கு ரியான் சம்பாதித்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகம் சம்பாதிக்கும் யூ டியூபராக தொடர்ந்து 3-வது ஆண்டாக ரியான் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.