பிரித்தானியாவில் அடுக்கு முறை கட்டுப்பாடுகளும் பலனில்லை: விஞ்ஞானிகள் முக்கிய கோரிக்கை!

294

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் கொரோனா இ.றப்பு விகிதம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய அடுக்கு முறை கட்டுப்பாடுகள் பாதிப்பை குறைக்க போதுமானதாக இல்லை என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா இ.றப்புகள் இதுவரை 74,000 கடந்துள்ள நிலையில், மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா பரவல் பிரித்தானியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லண்டனில் பிரதான மருத்துவமனைகள் படுக்கை பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், கொரோனா பெருந்தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த புதிய திரிபு மிகவும் வேகமாக பரவக்கூடியது என தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது.

இதுவரை பிரித்தானியாவில் கொரோனா பாதிப்புக்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 2,542,065 என தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 28 நாட்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 74,125 என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையிலேயே தற்போதைய அடுக்கு முறை கட்டுப்பாடுகளைவிட கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என விஞ்ஞானிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.